Published Date: November 27, 2024
CATEGORY: CONSTITUENCY
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்
பள்ளிகளில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.
தமிழ்நாடு துணை முதல்வர் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்த நாளை ஒட்டி மதுரை மத்திய தொகுதி எல்லீஸ் நகர் பகுதி கழகம் சார்பாக மதுரை மகபூப்பாளையத்தில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளியில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பள்ளிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரங்கள், மின்விசிறி, சேர், தலையணை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
எல்லிஸ் நகர் பகுதி செயலாளர் பி.கே. செந்தில் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், மண்டல தலைவர் பாண்டி செல்வி, மாநகர் மாவட்ட அயலக அணி அமைப்பாளர் சையது, வட்டச் செயலாளர்கள் பி.கே. சுரேஷ், அழகு சுந்தரம், மணிகண்டன், மாணிக்கம், மாமன்ற உறுப்பினர்கள் மகாலட்சுமி, பாமா முருகன், செல்வி, செந்தில் இளைஞர் அணி வினோத்குமார் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
முன்னதாக மதுரை மாநகர் மாவட்ட அயலக அணி சார்பில் மகபூப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 837 மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களையும் 61வது வட்டக் கழகம் சார்பாக எஸ்.எஸ். காலனி, மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு புத்தகப்பை, நோட்டு புத்தகம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
Media: Dinakaran